முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 106


அத்தியாயம்: 106


"பைரவி கார்ல ஏறு. " என மது கட்டளையிட. அதை மதிக்காது,


"ஏன். " எனக் கேள்விகளுடன் நின்றாள். 


"சொல்றேன்ல. ஏறுடி. " என மிரட்ட, அப்போதும் ஏறாமல். 


"ஆனா நான் சாப்பர்ல வந்தேனே. " என்றவளைப் பிடித்திழுத்து உள்ளே போட்டவன் காரில் ஏறி அமர்ந்தான். 


" அம்மா… இடுப்பு போச்சி. கொஞ்சம் கூட பொறுமையே கிடையாது. அரகெண்ட். ராக் மேன். " எனப் புலம்பியவள் தன்னைக் குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு,


"ஹாய் தீஷ். ஆர் யூ ஃபீல் பெட்டர் நௌ. " எனக் குசலம் விசாரிக்க,


"அவனுக்கு என்ன! நல்லாத்தா இருக்கான். நீ முதல்ல சீட் பெல்ட் போடு. " என்றவன் தீஷித்திற்கு சீட் பெல்ட்டைப் போட்டு விட்டு தானும் அணிந்து கொண்டு வேகமாக காரை ஓட்டத் தொடங்கினான். அவன் கூறியதைத் காதில் வாங்காதவள்,


" இவ்ளோ பெரிய கட்டு. வலிக்கிதா தீஷ். " எனக் கண்ணீருடன் பாவமாக தீஷித்திடம் கேட்டவளைப் பிடித்து பின்னாள் தள்ளிய மது. 


" Put your seatbelt right now. "  என முழங்கவே செய்ய, பைரவியின் முகம் சுருங்கி விட்டது. அது பொருக்காத தீஷித். 


" நத்திங் டாம். வேகமாக போகணும்ல, அதான். கட்டு தான் பெருசு. பட் காயம் சின்னது தான். வலி இப்ப இல்ல. " எனப் புன்னகையுடன் தலையைத் திருப்பி சொல்ல அவள் மது சொன்னதைச் செய்தாள். 


மது, "நீ எதுக்கு ஹாரன் அடிச்ச.?" 


" ரொம்ப நேரமா சத்ததையே காணும். அதா அடிச்சேன். " 


"அப்ப நீ பாக்கல. " 


"எத?" என்ற தீஷித் அப்போது தான் தங்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரிகளை ரிவர் வியூ மிரர் வழியே பார்த்தான். 


" ஐய்யையோ… மறந்திட்டேன். வண்டிய திருப்புங்க. என்னோட சாப்பரோட சாவிய சாப்பர்லயே வச்சிட்டு வந்திட்டேன். திருப்புங்க. " என மதுவின் சீட்டைத் தட்டி சொல்ல,


"டோன்ட் வெரி. உன் சாப்பர யாராலயும் திருடீட்டு போக முடியாது. " மது. 


"ஏன்?" 


"ஏன்னா அள்ளிட்டு தான் போகணும். காய்லாங்கடைக்கி. " என்ற தீஷித்தின் பார்வை பதிந்திருந்த திசையை நோக்க, அவளின் சாப்பர் அப்பளமாக நெருங்கி இருந்தது. 


"இந்த கண்டிஷன்ல யாரும் திருடிட்டு போக முடியாது டாம். " எனக் கேலியாக தீஷித் கூற, 


ஆ… என வாயில் கை வைத்து அமர்ந்தவளுக்கு அதிர்ச்சி. காரிலேயே கூப்பாடு போடத் தொடங்கி விட்டாள்.


" ஐய்யோ… ஐய்யோ. என்னோட ஆச சாப்பர். என்னோட அப்பா குடுத்த முதல் கிஃப்ட். அத இப்படி ஆக்கிட்டானுங்களே. " எனக் கத்த, 


" இன்னும் கொஞ்ச நேரம் நின்னிருந்தா சாப்பரோட சேந்து நீயும் நசுங்கிருப்ப. உன்ன யாரு டி இன்னைக்கி டியூட்டிக்கு போகச் சொன்னா. நாந்தா உங்கிட்ட தெளிவா சொன்னேனே. ஒரு பேச்சுக்கு ரெஸ்பெக்ட் கிடையாது உங்கிட்ட. எல்லாமே தான்தோன்றித்தனமாகவே செய்ய வேண்டியது. " எனத் திட்ட, பைரவி தன்‌ சாப்பருக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். 


பாவம் மதுவிற்கு தான் அவள்‌ அழுதால் பிடிக்காதே. இப்போது அதற்கும் சேர்த்து வாங்கி காட்டிக் கொண்டாள். 


"நீ கார் திருப்பிட்டு சென்னை வராம இருந்திருந்தா இந்த நிலமையே வந்திருக்காது. என்னைத் தேடித்தான வந்திருப்பானுங்க அவனுங்க. அவனுங்களுக்கு லட்டு மாதிரி வாய்ப்ப குடுத்திருக்க. " எனத் தீஷித் மதுவிடம் சண்டைக்கு செல்ல 


" 'நான் வாய வச்சிட்டு சும்மா இருந்திருந்தா.'ன்னு சொல்லணும். கண்டத பேசி என்னை டைவர்ட் பண்ணிட்டு வியாக்யானம் பேசுறியா.. " எனத் தீஷித்திடம் திரும்ப,


" இப்ப என்னோட சாப்பருக்கு வழி சொல்லுங்க. " என இருவருக்கும் இடையே பைரவி பேசினாள்.


" கார்ப்பரேஷன் காரெ வாரி எடுத்திட்டு போவான். அவன்ட்ட தான் கேக்கணும். " என்ற மது பேச்சு பைரவிக்கு எரிச்சலாக வந்தது. 


"வண்டிய நிறுத்துங்க நான் இறங்கப் போறேன். என் சாப்பர நான் போய் பாக்கணும். " 


" நீ என்ன லூசா. உன்ன போடத்தா அந்த கண்டெய்னர் வந்திருக்குன்னு சொல்றேன். அத புரிஞ்சாக்காம இறங்குறேங்கிற. " 


"என்னை எதுக்கு போடணும். தீஷித்த தான் அவங்க குறி. அவங்க கிட்ட இருந்து காப்பத்த தான் உங்க கிட்ட வந்திருக்கோம். நீங்க உங்க டியூட்டிய சரியா செய்யாததுனால தான் என்னோட சாப்பர் போச்சி. " என அழுதவள் மதுவுடன் மல்லுக்கு நின்றாள். 


அவளுக்கு தெரியாது. வைத்த குறி தீஷித்திற்கு அல்ல அவளுக்கு தான் என்று. 


மதுவின் உள் மனம் சொல்லியது பைரவிக்கு ஆபத்து என. அது இதுவரை மதுவை ஏமாற்றியதில்லை. எனவே பைரவியைச் சென்னையில் விட்டுச் செல்வது என்பது மதுவிற்கு சரியென படாததால் திரும்பி வந்தான்.


அது உண்மையும் கூட. மதுசூதனன் தான் தீஷித்துடன் இருக்கிறான் என்பதை அறிந்து மதுவை தீஷித்திடம் இருந்து விலக்கி வைக்க பைரவி குறி வைக்கப்பட்டாள். வழக்கம் போல் மது காப்பாற்றி விட்டான். இதில் ஹை லைட் என்னவென்றால் அதை பைரவி நம்ப மறுப்பது. மது தீஷித்தைச் சென்னை அழைத்து வந்ததால் தான் தன்னுடைய சாப்பர் நசுங்கி போய்விட்டு என வாதாடினாள். 


மது, அவளின் கரம் பற்றி காதல் மொழி பேசியது போல் நிதானமாக புரியும் படி கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவனின் இயல்பு அது இவளின் இயல்பு இது எனும் போது‌ எதைத் தான் குறை சொல்வது.


கார் முழுவதும் கணவன் மனைவி இருவரின் குரலே நிறைந்திருக்க தீஷித்தும் பைரவிக்கு ஆதரவாக பேச கடுப்பாகிப்போனான் மது. 


" Shut up. Don't come between us." இருவரும் இடையே வராதே எனக் கோபமாக சொல்ல,


" For why.? " கூலாக தீஷித் கேட்டான் ஏன் வரக்கூடாது என.


"we are husband and wife. so stay away. " 


" we was husband and wife. உனக்கு ஸ்கூல்ல tense உண்டு தான. இறந்த காலத்த எப்படி சொல்லணும்னு தெரியாதா. husband and wife இல்ல. husband and wife‌-அ இருந்தோம். என்னைக்கி கோர்ட்டுல வச்சி கையெழுத்து போட்டு பிரிஞ்சி போனிங்களோ அப்பவே உங்க கல்யாணம் இறந்த காலமா மாறிடுச்சி. " என்க. 


"அதான... டைவர்ஸ் ஆகி நாலு மாசத்துக்கு மேல ஆச்சி. இனிமே  husband and wifeனு சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. " என நேரம் பார்த்து பைரவியும் மதுவை வார, கார் க்ரீச் என்ற சத்தத்துடன் நின்று விட்டது. பைரவி திருதிருவென முழிக்க.


" ஏன் கார நிப்பாட்டுன. சேஸ் பண்ணிட்டு வர்றாங்க உனக்கு தெரியலயா. எடு கார். " எனத் தீஷித் பரபரத்தான். 


"ஷீ... என்னை அப்பாயின் பண்ணது நீ இல்ல. சோ. நான் உம்பேச்ச கேக்க மாட்டேன்‌. சொல்ல வேண்டியவங்க சொல்லட்டும் கார எடுக்குறேன்." எனத் திரும்பி பைரவியைப் பார்க்க,


"இன்னும் என்ன சொல்லணும். " எனக் கேட்க, 


"என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு. நான் கார எடுக்குறேன். " என அசால்ட்டாக சொல்லி காரின் சாவியை எடுத்துக் கொள்ள, பைரவியும் தீஷித்தும் பின்னால் திரும்பி பார்த்தனர். 


துரத்தி வந்த ட்ரெக் தெரிந்தது. காருக்கும் ட்ரெக்கிற்கும் இடைப்பட்ட தூரம் குறைந்து கொண்டே வந்ததை ரிவர்வியூ மிரர் காட்டியது. முதலில் புள்ளியாக தெரிந்த அது உருவம் பெற்று பக்கத்தில் பெரிதாக தெரிய, 


" என்ன கார்னர் பண்ணிங்களா? ப்ளாக் மெயில் பண்ணி பாக்குறிங்களா. "  


"எப்படினாலும் எடுத்துக்க. எனக்கு தேவங உன்னோட சம்மதம். சத்தியம் பண்ணு கார எடுக்குறேன். " மது.‌


"என்ன திடீர் ஞானோதயம். முதல்ல விவாகரத்து கேட்டது நீங்க.. " 


"இப்ப கல்யாணமும் நாந்தா பண்ணிக்கலாம் சொல்றேன். " என்றவனை முறைக்க,


" க்ளோஸ்ஸா வந்திட்டு இருக்கு. பைரவி வேற நம்ம கூட இருக்கா. கார ஸ்டாட் பண்ணு மது. " தீஷித் சொல்ல பைரவி அதற்கு ஒத்து ஊதினாள். 


" இவென்லாம் கேலி கிண்டல் பண்ற அளவுக்கு நான் ஒன்னும் தரம் தாழ்ந்து போய்டல. நீ சொன்ன மாதிரி மிஸ் அண்டர்ஸ்டான்டிங் தான். நாம அதைப் பேசிட்டோம்னு நம்புறேன். சால்வ் ஆகிடுச்சி. இனியும் எதுக்காக இந்த ஜோக்கர்லாம் பேசுற அளவுக்கு நாம பிரிஞ்சி இருக்கணும். " என விளக்கம் தர, 


"சரியா ஒன் மினிட்ல ட்ரெக் நம்மல இடிச்சிடும். " எனத் தீஷித் கவுண்ட் டவுன் சொல்ல, மது சாவியைச் சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தான்.‌


"சரி பண்ணிக்கிறேன். கல்யாணம் தான. ஓகே. இப்ப கார எடுங்க. ப்ளிஸ். " என்றவளை மது குறும்புடன் பார்க்க,


"மாமா, ப்ளிஸ் கார எடுங்களே. " என்ற கொஞ்சும் மொழிக்கு கார் மின்சாரம், பெட்ரோல் எதும் இன்றி பறந்தது, அதை ஓட்டியவன் சார்ஜாகி இருந்தானே. அது போதாது. 


பின்னால் வந்த ட்ரெக் கண்ணில் படாத தூரம் கார் செல்ல, நிம்மதி பெருமூச்சு விட்டனர் மூவரும்.


"உஃப்... இப்போதைக்கி தப்பிச்சிட்டோம்‌. எங்க போறோம். " என்றவளின் கேள்விக்கு வெளியே இருந்த பெரிய ஃபோர்டு பதில் சொல்லியது. 


பச்சை வண்ண அறிப்பு பலகை அது. சாலைகளில் ஊரின் பெயர்களையும் தூரத்தையும் திசையையும் குறிப்பிட்டு இருக்குமே அந்த மாதிரியான பலகை அது. அதில் விமான நிலையம் என்று அம்புக்குறி போட்ட திசை பக்கம் மது காரை விட்டான். 


பைரவி, "ஏர் ஃபோர்ட்டுக்கு எதுக்கு?"  


"நான் நிம்மதியா டிரைவ் பண்ண. " 


"ஏர்ஃபோர்ட்? டிரைவ்விங்? ரெண்டுக்கும் என்ன சம்மந்தம்‌.‌. " எனப் புரியாது கேட்டவளிடம் உன்னை டெல்லி அழைத்துவர ராக்கி, தாமரை, சாரு மற்றும் வேறு சிலரும் விமான நிலையத்தில் இருப்பதாக கூறினான் மது. 


"டெல்லி தான. உங்க கூடவே வந்திடுறேன். " எனபீ பைரவி குதுகாத்துடன் சொல்ல, 


"நோ. " என இரு ஆண்களிடம் இருந்து பதில் வேகமாக வந்தது. 


'என்னை கன்ட்ரோல் பண்ணணும்னா மட்டும் ரெண்டு பேரும் ஒன்னு சேந்திடுவானுங்க. ' என முணுமுணுக்க,


" இம்சைய கூடவேலாம் கூட்டீட்டு போக முடியாது. ஆல்ரெடி ஒன்னு பக்கத்துல இருக்கு. இதுல ஆஃபர்ல இன்னொன்னா. " என்ற மதுவை முறைக்க,


" டாம் இது ரிஸ்க். உன்ன ஒரு சேஃப்பான இடத்துல சேத்திட்டா நாங்க நிம்மதியா இருக்க முடியும்‌. " தீஷித் பொறுமையாக எடுத்து சொல்ல, மதுவிற்கு இவ்வளவு விளக்கம் தேவையா என்றிருந்தது. 


தீஷித்தின் உபதேசத்தைக் கேட்டவள் அமைதியாக அமர்ந்திருக்க காரில் மௌனம் நிலவியது. அதை அவளே கலைக்கும் விதமாக, 


" உங்ககிட்ட டீல் பேச வர்றவங்ககிட்ட இருந்து எப்படி பேமெண்ட் வாங்குவிங்க. கேஸ்ஸா. செக்கா. ஃபோன் பே மாதிரியான டிஜிட்டல் வழியாவா. இல்ல எங்கிட்ட மிரட்டி வாங்குன மாதிரியா?" எனப் புருவம் உயர்த்தி அவள் கேட்ட தோரணை இரு ஆண்களையும் கவர்ந்தது. 


தீஷித்தை அழைத்துச் செல்ல பைரவியிடம் வம்பும் பேரமும் பேசி முத்தம் வாங்கியது போல் வேறு எந்த பெண்ணிடமாது வாங்கியிருக்கிறாயா என்ற அர்த்தத்தில் கேள்வி எழுப்ப, மதுவிற்கு அவளின் கேள்வியில் உள்ள பொருள் புரிந்தது. 


" இதுவரைக்கும் இல்ல. பட் இனிமே இப்படி வாங்கிக்கலாம்னு ஒரு ஐடியா வந்திருக்கு. எக்ஸ்பெஷலி எங் கேர்ள்ஸ் கிட்ட. " எனக் கன்னத்தைத் தடவி கண்சிமிட்டி சொல்ல, 


பைரவி தன் சீட் பெல்ட்டை கலட்டி முன்னால் அமர்ந்திருந்த மதுவின் கழுத்தில் அதைச் சுற்றினாள். 


"டாம் என்ன பண்ற? " எனத் தீஷித் படபடத்தாலும் மதுவிற்கு அது குதுகலாமாக இருந்திருக்க வேண்டும்.


"கொல பண்ணப் போறேன். உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இன்னொரு பொண்ணுக்கிட்ட முத்தம் கேப்பேன்னு  எங்கிட்டயே சொல்லுவ. இனி எவளயாது திரும்பி பாக்கணும்னு நினைச்சா கூட, கழுத்துல ஒரு எலும்பு இருக்காது. உடச்சி எடுத்திடுவேன். " என அவன் சீரியஸ்ஸாக மிரட்ட, மதுவிற்கு 'பேக் டூ டெடி.' என்றிருந்தது. குறுநகையுடன் காரை ஸ்டெடியாக ஓட்ட, பைரவி டேஸ் ஃபோர்டில் இருந்த மதுவின் ஃபோனை எடுத்தாள். 


"லாக் பேட்டன் என்ன‌? " 


" நான் எதையும் மாத்தல. நீ போனப்ப எப்படி எது எங்க இருந்ததோ அது அங்கேயே பத்திரமா இருக்கு. " என்றவனின் அலைபேசியைத் திறந்து வாட்ஸ்அப்பை பார்த்தவள்,


" கல்யாணத்த நிறுத்திட்டேன்னு சொன்னிங்க. அப்றம் எதுக்கு அந்த ரூபி உங்களுக்கு மெஸ்ஏஜ் அனுப்பிருக்கா. அதுவும் மிட் நைட்ல. " என்றாள் அதட்டலாக,


"அத அவாக்கிட்ட தான் கேக்கணும். நான் அனுப்பிருந்தா உன்னோட ஆவேசம் கரெக்ட். நான் அத என்னன்னு கூட பாத்தது இல்ல." எனக் குறுநகையுடன்‌ சொல்ல, இருவரின் சண்டையையும் வேடிக்கை பார்த்தபடி வந்த தீஷித்திற்கு நந்திதா சொன்ன அன்னேன்யம் புரிந்தது. 


"தீஷ் அடுத்தவங்க கிட்ட நாம சேர் பண்ணிக்கிறது எல்லாமே நம்மோட கஷ்டத்த மட்டும் தான். ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சந்தோஷத்தையும் பகிர்ந்திப்போம். பட் அந்தரங்கமா சில விசயம் இருக்கு. அத ஹஸ்பெண்ட் வைஃப் கிட்டயும் வைஃப் ஹஸ்பெண்ட் கிட்டயும் மட்டும் தான் சொல்லிக்க முடியும். அப்பா அம்மாட்ட கூட தயக்கம் இருக்கும். பட் வாழ்க்கை துணைக்கிட்ட இருக்காது. 


அது தான் தாம்பத்தியத்தோட சிறப்பு. கணவன் மனைவின்னு ஒரு உறவு தான். ஆனா தன்னோட லைஃப் பார்ட்னர் மூலமா ஒட்டு மொத்த உறவையும் பாப்பாங்க பகிர்வாங்க. அது மூனாவதா பார்க்குற யாருக்குமே புரியாது. தன்னை அடிச்சி அசிங்கமா பேசி கொடும படுத்துற புருஷனாவே இருந்தாலும் மூனாவதா ஒரு ஆள் கிட்ட அவன விட்டுக் குடுக்க மாட்டாங்க. " என அழுத்திச் சொன்ன நந்திதாவின் வார்த்தைகள் எந்த அளவுக்கு உண்மை என்று தெளிவாக புரிந்தது. 


இந்தப் பெண்கள் மட்டும் எத்தனை கொடும்பாதக செயல்களைச் செய்தாலும் கணவனே கதி என்று மாறி விடுகிறார்கள். அந்த மந்திரம் புதுமையாக இருந்தது. சில ஆண்களும் அப்படித்தான். மனைவியை எங்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். 


பைரவியின் மிரட்டல் மதுவின் ஆணவம் கலந்த திமிர் பேச்சு, அதற்கு அவள் தரும் தண்டனை என இருவரின் உறவும் புதுமையாக இருந்தது. இருவர் மீதும் பொறாமை எழவில்லை. கோபம் எழவில்லை. மாறாக பைரவி அவனுள் இன்னும் இன்னும் அழுத்தமாக பதிந்து கொண்டே செல்வதைத் தவிர்க்கவே முடியவில்லை. 


மதுவின் இடம் தனக்கானதாக இருக்கக் கூடாதா என அன்றைய நாளில் எண்ணிலடங்கா முறை நினைத்துக் கொண்டான். அத்தனை சந்தோஷமாக இருந்தாள் பைரவி. அதை அவளிடமே என்றும் நிறுத்தி வைக்க வேண்டும். அவளின் புன்னகைக்கான சந்தோஷத்திற்காக எதையும் செய்ய துணிந்து நின்றான் அந்த காதலன். 


அந்த மதி முகம் அவனின் உயிர் மூச்சிருக்கும் வரை மறையாது.

 தொடரும் ...


💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...