அத்தியாயம்: 107
அது A1 telecommunication industry என்ற பெயர் பொரிக்கப்பட்ட கட்டிடம். அதன் மீட்டிங் ஹாலில் அனைத்து போர்டுடாஃப் மெம்பர்ஸ்ஸும் கூடியிருக்க, அதன் தலைமை இருக்கையில் அமர்ந்திருந்தார் சிராஜ் குப்தாவின் தந்தை மேதவ் குப்தா. அவர் முகம் இறுக்கமாகவும் அடக்கப்பட்ட கோபத்துடனும் இருந்தது.
அவருக்கு அருகே இரு நாற்காலிகள். அதில் அவர் ஈன்ற செல்வங்கள். உமேத் மற்றும் சிராஜ். இருவரும் இரு தாய் வயிற்று பிள்ளைகள் ஆன போதும் தந்தை ஒன்றாவார்.
மெனு கார்டே அச்சிடலாம் என்று சொல்லும் அளவுக்கு மேதாவிற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் சொந்தமாக பல தொழில்கள் இருப்பதால் வருமானத்தை பெருக்கவும் சம்பாதிக்கும் பணத்தைச் செலவு செய்யவும் என இரு மகன்கள் உள்ளனர். தன் தொழில் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி தன் ஆளுமையைப் பறைசாற்றும் வாரிசாக சிராஜ்ஜைக் காட்டிலும் அவனின் அண்ணன் உமேத் திறமையானவன் என்பது மேதாவின் கணிப்பு. அவரைப பொருத்தவரைச் சிராஜ் கத்துக்குட்டி.
இல்லை அது உண்மையல்ல என நிறுபிக்க சிராஜ்ஜும் என்னென்னமோ புதிய தொழில்களைத் தொடங்கி தன் திறமையைக் காட்டி தானும் சளைத்தவன் அல்ல என்று தந்தைக்குச் சொல்ல முயல, விளைவு பெருத்த பண நஷ்டம் மட்டுமே. பல பிஸ்னஸ்கள் எதாவது ஒரு காரணத்தால் மூடப்பட்டன. கடைசியான ஒரு வாய்ப்பாக இந்தத் தொலைதொடர்பு நிறுவனம் ஒப்படைக்கப்பட, அதற்கும் விரைவில் இழுத்து மூட அரசு ஆணை பிறப்பிக்க உள்ளது. நீதி மன்ற தீர்ப்பு வந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அது நடக்கலாம்.
பணம் மட்டுமென்றால், அவரிடம் இல்லாததா! இந்தா! வைத்துக் கொள் என்று தந்துவிடலாம். ஆனால் பணம் பிரச்சனை அல்ல. அரசனூர் வழக்கில் தீர்ப்பானது சிராஜ்ஜிற்கு எதிராக வந்தால் முதலில் மூடப்படுவது கிளை நிறுவனமான A1 tele communication industry. அத்தோடு நிறுக்காது.
தீஷித்திடம் சிக்கியுள்ள சில ஆதாரங்கள் வெளியே வந்தால், அதன் தாய் நிறுவனத்தின் மதிப்பையும் கேள்விக்குறியாக்கி விடும். இப்போது ஆட்டம் காண இருப்பது அவர் பரம்பரை பரம்பரையாகக் கட்டிக் காத்து வந்த தொழில் சாம்ராஜ்யம் மற்றும் கௌரவம். மதுவின் பாதுகாப்பில் இருந்த சிராஜ்ஜிடம் இருந்து, தீஷித் அபகரித்த ஆதாரங்கள் அப்படிப்பட்டவை.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகள் உண்டு. ஒன்று தீஷித், கண்ணாயிரம், சாரதா எனக் கிடைத்திருக்கும் அனைத்து சாட்சிகளையும் போலியாதாக மாற்றி கேஸ்ஸை ஒன்னுமில்லாமல் செய்வது. அது அவர்களுக்குக் கடினமான செயல் அல்ல. பணம் இருக்கும் இடத்தில் பிணம் கூட எழுந்து நடனமாடும். வழக்கறிஞர்கள் முதல் அனைவரும் விலை பேசப் பட்டிருந்தனர்.
ஒரு வேளை அவர்கள் போட்ட முதல் திட்டம் தோல்வியைத் தழுவினால், கிடைத்திருக்கும் சாட்சிகளால் தீர்ப்பு எதிராக அமைந்து விட்டால் என்ன செய்வது.
மேதவ் குடும்ப மானமும் தொழிலிலும் வீழக்கூடாது என்றால் சிராஜ்ஜைத் தனி மரமாக்கி அனைத்து தவறுகளுக்கும் பொறுப்பேற்று ஒதுக்கி வைப்பது.
அதாவது துரத்தி வரும் புலியைத் தடுக்க புலியைக் கொல்வது அல்லது ஆட்டைப் பலி கொடுத்து புலியின் பசியைப் போக்குவது. ஆடு போல் சிராஜ்ஜைத் தூக்கிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதல் படியாக சிராஜின் தொழில் நடவடிக்கைகளுக்கும் மேதாவின் குழுமத்திற்கும் சம்மந்தம் இல்லை என நிர்வாக உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு அவரின் குழுமத்தின் மீதிருக்கும் சிராஜின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டது.
" இன்னைல இருந்து இந்த கம்பெனி தொடர்பான எந்தச் செயலுக்கும் இழப்புக்கும் குப்தா குழுமம் பொறுப்பில்ல. " என டாக்குமெண்ட் அடிங்கிய கோப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு மகனை அனாதையாக்கி விட்டு தன் சாம்ராஜ்யத்தைக் கவனிக்கச் சென்றார் அவர்.
சப்போட்.
நான் என்ன செய்தாலும் தன்னைத் தாங்கி பிடிக்க, காப்பாற்றி ஆதரவு தர என்றும் தன் குடும்பம் இருக்கும் என்ற மிதப்பில் ஆடியவனுக்கு அது கானல் நீராகிப் போயிற்று. அது சிராஜ்ஜைப் பெரும் கவலையிலும் பயத்திலும் அமர வைத்தது.
அனைவரும் கலைந்து சென்று விட, உமேத் மட்டும் தன் தம்பியின் அருகில் சென்றான். இருவருக்கும் வயது என்பது ஒரு வருட வித்தியாசம் தான். தொழிலைப் பெருக்கும் திறமையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்றாலும் சிராஜ்ஜிற்கு மங்கையர்கள் மீது தீரா மோகம். அதுவே அவனின் வீக்னஸ். அது தான் அவனின் தொழில் சறுக்கலுக்குக் காரணம்.
" இது ஜஸ்ட்டா precaution தான். முன் எச்சரிக்கை நடவடிக்கை. உன்ன தனியா விட்டுடுட மாட்டோம். பட் இது நடக்க கூடாதுன்னா தீர்ப்பு உனக்கு சாதகமாக இருக்கணும். இருக்கும் தான. "
"இருக்கும்னு தான் நான் இத்தன நாளா நம்பிட்டு இருந்தேன். ஆனா இப்ப. அந்த **** பயளுங்க கைல என்னென்னமோ வச்சிட்டு என்னை மிரட்டி பாக்குறான். " என ஆவேசமாக எழுந்து கத்தினான் சிராஜ்.
" யார் மிரட்டுனா? " என்றவனிடம் இதுவரை நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான் அவன்.
"சோ, அந்த தீஷித் கிட்ட கிடைச்ச எவிடெண்ஸ்ஸோட சேத்து ஆளயும் தூக்கணும். சரியா. சிம்பிள். ஒருத்தன போடுறது அவ்ளோ பெரிய மேட்டர் இல்லயே. வலுவான ஆதாரம் இல்லன்னா கேஸ் நிக்காது. " என அசால்ட்டாக சொல்லியவனிடம் மதுவையைப் பற்றி கூறினான் சிராஜ்.
"எனக்கு தெரிஞ்சி அவனுங்க ரெண்டு பேரும் கூட்டு. அத்தோட ரெண்டு பேர்கிட்டையும் நம்மல கம்ப்ளீட்டா க்ளோஸ் பண்ற அளவுக்கு சில பேப்பர்ஸ் மாட்டிருக்கு. "
" நம்மல மீன்ஸ். "
"நீ நான் நாம ரெண்டு பேரும் மட்டுமில்ல. குப்தா க்ரூப்சையே இல்லாம ஆக்குற அளவுக்கு. " என்றவன் முன் மாலை பொழுதில் மதுவுடன் நடந்த கதையை சொல்லத் தொடங்கினான்.
தீஷித்தைத் தன்னிடம் ஒப்படைக்கும் படி மதுவிடம் பேரம் பேச இல்லை மிரட்ட, மது பதிலுக்கு மிரட்டி விட்டு வந்தான். அவனிடமும் சிராஜ்க்கு எதிராக சில மாட்டியுள்ளதே.
சிராஜ், "உனக்கு விசாகன் நியாபகம் இருக்கா. தி ட்ரக் மாஃபியா ஹெட். "
உமேத், " எஸ். நமக்கு நல்ல விஸ்வாசியா இருந்தான். பட் இப்ப உயிரோட இல்ல. "
" அவெ சாகும் போது அவனோட லாக்கர்ல இருந்த சில முக்கியமான டாக்குமெண்ட் காணாம போயிருக்கு. அதான் நாம இல்லீகலா இம்போர்ட் பண்ணோமே ஒரு தனிமம். "
" பொலோனியம். "
" எஸ், அத எங்க எப்படி எவ்ளோ வாங்கினோம்னு எதுக்கு வாங்கினோங்கிறது. என்ன மாறியான ஆராய்ச்சி பண்ணோம்னு எல்லாம் அந்த ஜிம் பாய்க்கு தெரிஞ்சிருக்கு. நேத்து அத வச்சி மிரட்டி போனான். அந்த ***.
பத்தாததுக்கு நாம அரசனூர்ல கனிமச் சுரங்கம் ஓப்பன் பண்ண போட்டு வச்சிருக்குற ப்ளான். வாங்கிருக்குற அப்ரூவல். அரசனூர் விவசாயிங்க கிட்ட ஏமாத்தி வாங்கின நிலம் அதுக்கு கீழ என்ன இருக்கிங்கிறனு எல்லாத்துக்கும் பக்காவான பேப்பர்ஸ் அவனுங்க கிட்ட இருக்கு. ஒன்னுல இருந்து தப்பிச்சாலும் அடுத்ததடுத்து சிக்க பொரி வச்சிருக்கானுங்க. " என இருவரையும் காது கூசும் அளவுக்குத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தான் சிராஜ்.
" கோர்ட்டுல அத சமிட் பண்ண கூடாது. " என்ற உமேத்தின் விழிகள் அக்னியாய் எரியத் தொடங்கின.
" அதுக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கு. ரெண்டு பேர் மட்டும் தனியா டெல்லிக்கி போய்ட்டு இருக்கானுங்க. இன்னைக்கி காலைல ஏர்போர்டல நம்ம ஆளுங்க பாத்திருக்காங்க. கார் இன்னேரம் ஆந்திரால போய்ட்டு இருக்கும். " என்ற படி வந்தான் நாகேந்திரன்.
ஆக மொத்தம் தீஷித் தலைக்கு மட்டுமல்ல மதுவின் தலைக்கும் விலை பேசப் பட்டிருக்கிறது.
இது எதையும் அறியாத நம் நாயகர்கள் குதுகலமாக உல்லாச சுற்றுலா சென்று கொண்டிருக்கின்றனர். ஸாரி தீஷித் மட்டும் உல்லாச சுற்றுலா மதுவிற்கு அது உல்லாசமா நிச்சயம் இருக்காது.
ப்ளேயரில் கன்னடத்து பாடல் ஓட விட்டு அதன் தாளத்திற்கு ஏற்றார் போல் காரின் கதவில் மேளம் அடித்துக் கொண்டே வந்தான் தீஷித். அவனை அடக்கத்தான் முடியவில்லை மதுவால். பைரவியின் ஆதரவு கிடைக்கும் திமிரில் தீஷித்தின் ஆட்டம் அதிகமாகவே இருந்தது. முடிந்த மட்டிலும் அவனைக் கண்டுக் கொள்ளாது இருந்தவன் ராக்கிக்கு அழைத்தான்.
நான்கு மணி நேரம் முடிந்து விட்டது. பத்திரமாக டெல்லியை அடைந்தார்களா என்று ராக்கியிடம் கேட்டவனுக்கு பைரவி என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற கேள்வி பிறந்தது.
" அவ எங்க மச்சான். " என மென் குரலில் கேட்ட ஆடவனின் முகத்தில் வந்த உணர்வானது ரசிக்கும் படி இருந்தது. ப்ளேயரை ஆஃப் செய்தவன் மதுவின் சம்பாசனைகளைக் கேட்கத் தொடங்கினான்.
'ஒட்டு கேக்குறதுல என்ன ஒரு அளாவதியான சந்தோஷம். '
" பவதா மேம் கிட்ட ரொம்ப சின்சியரா பேசிட்டு இருக்கா. அந்தத் தனிமத்த பத்தி நிறைய, நெட்ல தேடி பிடிச்சி படிச்சாளாம். அதெல்லாத்தையும் சொல்லி வாதாட சொல்லிட்டு இருக்கா.. " ராக்கி.
" ஓ… வக்கிலுக்கே வாதாட சொல்லித்தர்ற அளவுக்கு brilliant ஆகிட்டாளா. "
"brilliant மட்டுமில்ல சீபிஐயா அவதாரம் எடுக்கப் போறாளாம். எப்படி ஐபிஎஸ் ஆனிங்கன்னு கேட்டு விக்னேஷ் ஸார் உயிர எடுத்திட்டு இருக்கா. " எனச் சொல்ல, மதுவின் உதடுகள் அகல விரிந்து புன்னகை சிந்தின.
" எதுக்கு சீபிஐ. இப்ப இருக்குற எஸ்ஐ போஸ்ட்டுக்கு என்ன குறை. "
" நானும் இந்தக் கேள்விய கேட்டேன் மச்சி. எஸ்ஐயா இருந்தா வெயில்ல டிராபிக் வேலைலாம் பாக்கச் சொல்றாங்களாம். வேர்க்குதாம். ஏசி அறைல உக்காந்து தான் வேலையே பாப்பாளாம். அதுவும் அதிகமா ப்ரஸ்ஸர் தர்ற மாதிரி இருக்க கூடாதாம்.
ஈஸியா பெஞ்ச தேச்சிட்டு கோல்டு மெடல் வாங்கிட்டு போற மாதிரி வேலை தான் வேணுமாம். அப்படிப்பட்ட டிப்பார்ட்மெண்ட் எதுன்னு கேக்குறா. " என இருவரும் பைரவியைக் கேலி செய்ய, அதைப் பைரவி கேட்டு விட்டாள் போலும் வேகமாக வந்து ஃபோனை வாங்கியவள் முதலில் விசாரித்தது தீஷித்தை பற்றி.
" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எப்படி இருந்தானோ அப்படியே தான் உக்காந்திருக்கான். அசைய கூட இல்ல போதுமா. " என மது கடுகடுத்து பேச,
"என்ன இவ்வளோ கோபமா பேசுறிங்க. உங்க பேச்சே சரியில்ல. ஒரு செல்ஃபி எடுத்து அனுப்புங்க. ஆள முழுசா வச்சிருக்கிங்களா இல்லையான்னு டவுட்டா இருக்கு. அப்பத்தா நான் நம்புவேன். " என்றாள் அவள்.
"முடியாது. " எனக் கருணையற்று சொல்ல, க்ளிக் என்ற சத்தம் கேட்டது. தீஷித் தான். அவனின் டாம் சொன்னதை செய்து முடிப்பவனாயிற்றே. அதை அவளுக்கு அனுப்பியும் வைத்தான்.
தீஷித் மதுவையும் சேர்த்து புகைப்படம் எடுத்து அனுப்ப, அதை ஜூம் செய்து பார்த்தவள் தீஷித்தின் நலத்தை அறிந்து கொண்டு மதுவைக் கத்தத் தொடங்கினாள்.
"காதுல என்ன ப்ளூடூத்தா. கார் ஓட்டும் போது ஃபோன் பேசக் கூடாது. அது உங்களுக்கு தெரியாதா. கடுகடுன்னு மூஞ்சிய வச்சிட்டு ஓட்டுறிங்க. பின்னாடி தெரியுற மரத்த வச்சி பாக்கும் போது ஸ்பீடா ஓட்டுற மாதிரி இருக்கு. ஹைவேயா இருந்தாலும் ஓவர் ஸ்பீடு உடம்புக்கு ஆகாது. " என மதுவை போல் பல அட்வைஸ்களை அள்ளி தெளிக்க,
"எல்லாம் எனக்கு தெரியும் நீ வை டி ஃபோன. " என கட் செய்தவன் முகத்தில் ஒருவித நிம்மதி இருந்தது. செல்ல சண்டை. எண்ணிக்கை இல்லாது நடைபெறும் இது போன்ற ஊடல்கள் உறவிற்கு எத்தனை முக்கியமானதாக இருக்கிறது.
"உனக்கு ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசணும்னு சரியா தெரியல. " என கமெண்ட் அடித்தான் தீஷித்.
" அது பொண்ணு இல்ல என் பொண்டாட்டி. அத்தோட எனக்கு தெரிஞ்ச வரைக்கும் போதும். புதுசா தெரிஞ்சிக்க எனக்கு விரும்பமில்ல." என்றவனைக் குறுகுறுவெனப் பார்த்தபடி தீஷித் இருத்தான்.
"எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும். கேக்களாமா. " என்றான் தீஷித்.
"என்னோட மனைவிய பத்தி கேக்குறதா இருந்தா எந்த உண்மையும் உனக்கு கிடைக்காது. "
"ச்சச்ச. உன்னோட மனைவி எனக்குத் தேவையே இல்ல. நீ இப்ப கல்யாணமானவனும் இல்ல. " என்றவனை முறைக்க,
"சரி முறைக்காத. நான் உன்ன பத்தி தான் கேக்க போறேன். "
"என்ன கேக்கப்போற? "
"ஜஸ்ட் தெரிஞ்சுக்க தான். "
"என்ன தெரியணும்?"
"உனக்கு மேரேஜ்க்கு முன்னாடி லவ்வர்னு லவ்வுன்னு ஏதாவது இருக்கா? இருந்ததா?"
"லவ்வெல்லாம் உன்ன மாதிரி வேலை வெட்டி இல்லாதவெ பண்றது. "
"ஹலோ நானும் வேலை வெட்டி இருக்குறவெந்தா. பல கோடில ரெவன்யூ பாத்திட்டு தான் இருக்கேன். எனக்கும் லவ்வு இருக்கு. ட்ரூ லவ்வு.. " என்றவனைத் திரும்பி பார்த்து புருவங்களை ஏற்றி இறங்கினான் மது.
'ஒன் சைடு லவ்வுக்கு இத்தன பில்டப்பா. ' என்றிருந்தது அந்தப் பார்வை.
"ம்ச்… இப்ப கேள்வி என்னைப்பத்தினது இல்ல உன்ன பத்தினது. உனக்கும் பொண்ணுங்களுக்கும் பழக்கம் எப்படி? லவ்வர் இல்லைன்னாலும் தோழி இருக்குமே. ஸ்கூல் காலேஜ்ல கூட படிச்சவங்க. "
"எதுக்கு உனக்கு இந்த கேள்வி? "
"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. அடுத்து நீ கேட்டதுக்குச் சொல்றேன். மாத்தி மாத்தி கேட்டுப்போம். "
" நான் படிச்சது மிலிட்டரி ஸ்கூல். அதுவும் பாய்ஸ் ஸ்கூல். காலேஜ்ஜ்ஜ் அங்கப் பொண்ணுங்க உண்டு தான். பட் எனக்குப் பேச பிடிக்காது. அப்படியே பேசுனாலும் பேச்சு… என்ன வேணுமோ அது சம்மந்தமாத்தா இருக்கும். அனாவசிய பேச்சு இருக்காது. "
"நான் எதிர் பாத்த மாதிரி நீ இல்ல. உனக்கு கேர்ள்ஸ்ஸ இம்ப்ரஸ் பண்ற திறம கம்மின்னு நினைச்சேன். பட் அந்த திறமையே உங்கிட்ட இல்லன்னு இப்ப நல்லாவே புரிஞ்சிடுச்சி. "
" நல்ல புரிதல். அப்படியே வச்சிக்க. " எனப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க, தீஷித் விடவில்லை. மதுவைப் பற்றி மாம்பழ வண்டாய் குடைந்து கொண்டே இருந்தான்.
அவனுக்கு மதுவைப் பற்றி அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இவன் பைரவிக்கு பொருத்தமற்றவன் என்று மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்ட பிழையைக் கண்டு பிடிக்க முடியும். அதனால் தொடர்ந்து மதுவின் பள்ளி வாழ்க்கை கல்லூரி பிறப்பு வளர்ப்பு நண்பர்கள் எனக் கேட்டுக் கொண்டே வந்தான்.
அது எரிச்சலை தந்தாலும் மது அதைக் காட்டிக் கொள்ளவில்லை. தான் கடந்து வந்த எந்த ஒரு பாதையையும் யாரிடமும் பகிர்ந்து இல்லை. ராக்கி, பைரவி உட்பட அனைவரும் அவன் இப்படித் தான் எனப் புரிந்து கொண்டனரே தவிர, புரிய வைக்கும் நோக்குடன் யாரிடமும் பேசியது இல்லை. உள்ளம் என்ற அறைக்கு பெரிய பூட்டு போட்டிருந்தான் மது.
ஆனால் தீஷித் திறந்தான் சாவியேதும் இல்லாது.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..