அத்தியாயம்: 95
தொலைக்காட்சிக்கு உயிர் குடுத்தவள் அதில் சீரியலை வைத்துவிட்டு அதைக் கவனியாது சிந்தனையை வேறு எங்கோ வைத்தபடி இருக்க, அலைபேசி பைரவியின் கவனத்தை ஈர்த்தது.
"ஹே சாரு. "
"என்னடி குரல்ல உற்சாகம் இல்ல. "
" அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ என்ன பண்ற. எப்படி போகுது உன்னோட கல்யாணம் வாழ்க்க. சந்தோஷமா இருக்கியா."
"ம்... சந்தோஷத்துக்கு குறைவில்லாம க்ரேட்டா இருக்கு. நான் சென்னைக்கு வரலாம்னு இருக்கேன். தாமரைய கூட்டீட்டு. ஒரு வாரம் உங்கூட தான். ஹாப்பியா இருக்கலாம். " எனச் சந்தோஷமாக சொல்ல,
" என்ன திடீர் விஜயம். இப்ப தான கல்யாணம் ஆகிருக்கு. அதுக்குள்ள அண்ணாவ விட்டுட்டு உன்ன யாரு இங்க வரச் சொல்றா. இரு அண்ணா கூடவே. "
" கூடவே இருக்கணும்னா நானும் அவர் பின்னாடியே டில்லிக்கி தான் போணும். "
"என்னடி சொல்ற. "
"அரசனூர் கேஸ்ஸுக்கு இன்னும் ஒரு வாரத்தில தீர்ப்பு வரப் போதாம். அந்த கேஸ்ல சம்மந்தப்பட்ட எல்லாத்தையும் ஆஜராகச் சொல்லி நோட்டிஸ் வந்தது. அத்தை மாமா சாரதாம்மான்னு எல்லாரையும் சென்னைக்கி வரச் சொல்லி வக்கீல் ஃபோன் பண்ணாங்க.
மது, அண்ணா வேற அவர மாமா கூடவே இருக்கச் சொல்லி சொன்னாரு. அப்படியே தாமரைய ராக்கி பாய் வீட்டுல விட சொன்னாரு. நான் உங்கூட இருக்கலாம்னு நினைச்சேன். ரொம்ப மிஸ் பண்றேன்டி உன்ன. " என்றபோது சிறு கண்ணீர் துளைத்தது, இருவருக்குமே.
"நானும் தான். " என்றாள் பைரவி.
"வீட்டுல சூழ்நில ரொம்ப மோசமா இருக்கு பையூ. மாமா அவரோட நம்பிக்க கொஞ்ச கொஞ்சமா இழந்திட்டே வாராரு. கேஸ்ல அவனுங்களுக்கு எதிரா ஸ்டாங்கான எந்த ஆதாரத்தையும் சப்மிட் பண்ண முடியல.
கேஸ்ல வெயிக்கப் போறோம்னு சொல்லி அவரோட பெரிப்பா பட்டாசு வெடிச்சி ஒரே அலப்பர. எனக்கே அந்தாளு பண்றத பாத்து அவ்ளோ காண்டு வந்தது. இவரு இறங்கி சண்ட போட்டு அந்தாளோட மூக்கு வாய உடச்சி விட்டுட்டாரு. கொஞ்சம் பயம்மா தான் இருக்கு பையூ. " என்ற சாருவின் மனவருத்ததை போக்க,
" Miracles happen anywhere and anytime. கேள்வி பட்டிருக்கியா. கண்டிப்பா ஒரு அதிசயம் நடக்கும். கடைசி நொடி வர நம்மோட நம்பிக்கைய இழக்கவே கூடாது சாரு. தைரியமா இரு. கண்டிப்பா தீர்ப்பு நம்ம பக்கம்தா வரும்னு உள்ளுக்குள்ள ஒரு பக்ஷி சொல்லுது. " என்றவளுக்கும் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது என்பது போல் அவளின் ஃபோன் மின்னி மறைந்தது.
காதில் இருந்து ஃபோனை எடுத்தவள் என்ன மெஸ்சேஜ் வந்துள்ளது எனப் பார்க்க, அதற்குள் சாரு 'ஹலோ. ஹலோ.' எனக் கத்தினாள். உடனே காதில் வைத்தாள் ஃபோனை.
"ம்… சொல்லு சாரு. "
"இந்த மாதிரியான ஒரு வைப்ப தான்டி நான மிஸ் பண்ணேன். எங்க பைரவி எப்பயுமே க்ரேட். உளுந்த ஊற வச்சி ஆட்டி எண்ணைல வடை சுட உனக்கு வரலன்னாலும் வாய்ல செம்மையா சுடுற டி. " என்க,
"ஏய்… நீ எதோ சோகத்துல இருக்கியே. கொஞ்சம் எங்கரேஜ் பண்ணலாம்னு பேசினா என்னையே கலாக்கிறியா. சரி எப்ப எங்க வீட்டு வர்ற. "
" நாளைக்கி. இன்னைக்கி மிட் நைட்ல பஸ், காலைல விடியல் அங்க தான். ப்ளிஸ் எனக்கு உங்கையால செஞ்ச பூரி வேணும். "
"பாண்டி அண்ணாவோட வந்தா பூரிக்கி தொட்டுக்க எலும்பு குழம்பு இருக்கும். இல்லன்னா எப்பயும் போல அவிச்சி வச்ச உருளக்கிழங்கு தான். "
"இதுக்காகவே நான் அவர கூட்டீட்டு வந்திடுறேன். விருந்து ரெடி பண்ணி வை. பை... நாளைக்கி பாக்கலாம். " என்றவள் வைத்து விட, மீண்டும் அழைப்பு வந்தது. இம்முறை அழைப்பு காலிங் பெல்லை அழுத்தியதால் வந்தது.
"யாரு அது?" என உள்ளிருந்தே குரல் கொடுக்க, பெல் விடாது அடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. கடுப்புடன் எழுந்து சென்றவள்.
"அவசர குடுக்க. வந்து கதவ திறக்குறதுக்குள்ள என்ன அவசரம். கைய எடுக்காம அழுத்திக்கிட்டே இருக்க. யாருய்யா நீ என்ன வேணும். " எனக் கத்திய படியே கதவை திறக்க, அங்கு நின்று கொண்டிருந்தது மதுசூதனன்.
"ஹைய்யோ. " என பெருமூச்சை இழுத்து விட்டவளின் கையில் ஒரு பேக்கைத் தினித்தவன் காலில் மாட்டி இருந்து ஷூ வையும் சாக்ஸையும் கலட்டி ரேக்கில் வைத்து விட்டு உரிமையுடன் உள்ளே சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
"ஹேய்… நீங்க வாட்டிக்கி உள்ள வந்து உக்காந்துக்கிறீங்க. எதுக்கு வந்திங்க. " எனக் காட்டமாக பைரவி கேட்க,
“வீட்டுக்கு எதுக்கு வருவாங்களோ அதுக்கு தான். நான் பண்ற எந்த மெஸ்சேஜ்க்கும் ரிப்ளே இல்ல. அதா உன்னோட வழிய ஃபாலோ பண்ணி நானே உன்ன பாக்க வந்திட்டேன்.
டெடி ப்ளீஸ் ஃபேன போட்டுடுட்டு ப்ளாக் காஃபி எடுத்திட்டு வாயேன். அப்படியே டின்னர எடுத்து வைச்சிட்டு கீட்டர ஆன் பண்ணி விட்டுடு. ஃபைவ் மினிட்ஸ் நான் ஃப்ரெஷ்ஷாகிட்டு வந்து சாப்பிடுவேன். " என வரிசையாக உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு இரு கரங்களையும் விரித்து சோஃபாவில் சாய்ந்து கொண்டு அமர்ந்தான்.
" வாட்… டின்னர் ரெடி பண்ணவா. கீட்டர் போடணுமா. ஹலோ இப்ப நான் உங்க பொண்டாட்டி கிடையாது. பாசமா வீட்டுக்கு வந்ததும் காபி போட்டு குடுத்து கை கால் அமுக்கி விட. முதல்ல உங்க வீட்ட பாத்து கிளம்பி போங்க. "
"பொண்டாட்டியா இருந்த போதே நீ எனக்கு பணி விட செஞ்சது இல்ல. இப்ப உங்கிட்ட இருந்து அத எதிர் பாக்க நான் ஒன்னும் முட்டாள் கிடையாது. "
"குட்… எனக்கு தெரியும் நீங்க அறிவாளி தான்னு. அதுனால உங்க அறிவையும் புத்திசாலிதனத்தையும் வீட்டுக்கு வெளில இருக்குறவங்க கிட்ட காட்டுங்க. எங்கிட்ட காட்டாதிங்க. ப்ளிஸ் கிளம்புங்க எனக்கு தூக்கம் வருது. " எனக் கதவை திறந்து விட, எழுந்து வந்தவன் வெளியே செல்லாது கதவை மூடினான். மூடியவன் சும்மா இருக்காது தன் முன்னாள் மனைவியை நோக்கி எட்டு வைக்க,
" மிஸ்டர் மதுசூதனன் இது கொஞ்சம் கூட சரியில்ல. உங்களுக்கு உரிமை இல்லாத வீட்டுக்கு வந்து கதவ... சாத்திட்டு... இப்படி… பக்கத்துல வர்றது. மொற கிடையாது சொல்லிட்டேன். " என வார்த்தைகள் தந்தி அடிக்க, கால்கள் பின்னால் நகர்ந்தது.
"நீங்க இப்படி வேற மூடோட இங்க வந்தது உங்க வருங்கால மனைவிக்கு தெரியுமா. " என்க.
" நீயே வேண்ணா கால் பண்ணி சொல்லு. உன்னோட வருங்கால கணவரும் என்னோட முன்னாள் புருஷனுமான மதுசூதனன் என்னை பாக்க நைட் டயத்துல வந்திருக்கான்னு. " என்றவன் அணிந்திருந்த கோர்ட்டை கலட்டி வீசிய படி அவளை நெருங்கி வந்தான்.
அவளுக்கு தெரியும் கணவனின் கை பட்டால் ஐஸ்கிரீம் சிலை எனக் கரைந்துருகிப் போகும் தன் மனத்தை. எனவே அவனைப் போலவே கோபமாக பேசி துரத்தி விட பார்க்க அது நடக்கவில்லை.
அவள் தன்னை விட்டு தூர செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாத மது எட்டி அவளை அணைத்தான். "விடுங்க. விடுங்க என்னை. " எனத் திமிறியவளிடம்,
"டெடி ப்ளிஸ் ஒரு பத்து நிமிஷம் அமைதியா நான் சொல்ற கேளேன். "
" முடியாது. பத்து நிமிஷம் இல்ல. பத்து செக்கேண்ட் கூட உங்க பேச்ச கேக்க தயாரா இல்ல. முதல்ல வீட்ட விட்டு வெளில போங்க. அம்மா இப்ப வந்திடுவாங்க. " என்றவள் உடும்பென தன்னை அணைத்திருக்கும் ஆடவனின் பிடியில் இருந்து விடு பட முயல,
"அதெப்படி வருவாங்க. நான் வெளில போனாத்தா அவங்க உள்ள வருவாங்க. டீல் அப்படி தான பேசிருக்கு. " என்றவனின் முகத்தை ஸ்லோ மோஷனில் திரும்பி பார்த்தாள் பைரவி. மது குறும்புடன் கண்சிமிட்டி.
"தெரியாத பூதத்த காட்டிலும் தெரிஞ்ச பேயே பெஸ்ட்டுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல. சாந்தி… உங்கம்மா. என்னோட பர்மனென்ட் மாமியாரு. "
"யாரு முடிவு பண்ணாலும் நான் சம்மதிக்கணும். இன்னொருத்தி பக்கத்துல உரிமையா நின்ன உங்கள நான் ஏத்துக்கவே மாட்டேன். தயவு செய்து என்னோட வாழ்க்கை குள்ள வராதீங்க. ப்ளிஸ். " எனக் கரம் குவித்தாள் கண்ணீருடன்,
அவனிடம் இருந்து விடுபட அவளின் அடுத்த ஆயுதம் அது. எத்தனை தான் மோகம் இருந்தாலும் அவள் கண் கலங்கிய விட்டால், அவளை விட்டு விலகி விடுவான். நெருங்கவோ தாபம் தீர்க்கவோ முயன்றதில்லை. ஆனால் எந்த ஆயுதமும் என்னைத் தாக்காது என்பதை போல் அவளை அழ விட்டு வேடிக்கை பார்த்தவன்,
"டேடி, எனக்கு சான்ஸ் குடேன். "
"குடுக்க முடியாது. வெளில போங்க." என வீம்பாக சொன்னவளின் முகம் பார்த்தவன் அவளைத் தூக்கிக் கொண்டு கட்டிலுக்கு விரைந்தான். விடச் சொல்லி திமிறியவளிடம்,
"டெடி ப்ளீஸ். உன்ன எதுவும் பண்ண மாட்டேன் ப்ராமிஸ். ஒரு டென் மினிஸ். ஓகே." என்றவன் கட்டிலில் அமர்ந்து அவளைத் தன் மடியில் கிடத்தினான்.
மனத்தில் எதாவது கலக்கமோ, குழப்பமோ இருக்கும் சமயங்களின் வீடு வரும் கணவனின் மடியில் இப்படி அவள் சாய்ந்து கொள்வது வழக்கம். அப்போது பைரவியின் கரம் தானாக உயர்ந்து கணவனின் சிகையில் சிக்கிக் கொள்ளும்.
"ஏன் சோகம் மாமா. நான் இருக்கேன். எது வந்தாலும் சூப்பர் விமென் மாதிரி எம்மாமன கஷ்டப்படுத்துற எல்லாத்தையும் தூக்கி போட்டு விரட்டி அடிப்பேன். " என விளையாட்டாக கண்டதைப் பேசி அவனின் மனநிலையை மாற்றுவாள்.
இப்போதும் மதுவின் கேசத்துடன் உறவாடச் சொல்லிய விரலைக் கடிவாளம் போட்டு தடுத்தவள் எதுவும் செய்யவில்லை. பேசவும் இல்லை. அமைதியாக நிமிடங்கள் கழிந்தது.
மதுவின் மனக்கலக்கத்திற்கு காரணம் அவனின் சிறிய தகப்பனின் குடும்பம் தான்.
ஜெயா விடுவதாக இல்ல. தன் அண்ணன் மகள் தான் மதுவிற்கு சரியான ஜோடி என மது தடுத்து நிறுத்திய நிச்சயதார்த்தை மதிக்காது கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.
அவனும் வெளிப்படையாகவே சொல்லி விட்டான். பைரவியைத் தவிர வேறு யாரையும் நான் ஏற்பதாக இல்லை என்று. ஆனாலும் இன்று குடும்பமாக சென்று கல்யாணத்திற்கு புடவை நகைகள் எடுத்து வந்தது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அதிலும் கல்யாண புடவையில் மணமக்களின் பெயர்கள் நெய்யப்பட்டிருந்தது. தன் பெயருக்கு பக்கத்தில் பைரவி அல்லாது வேறு ஒருத்தியின் பெயரைப் பார்க்கவே அவனுக்கு சகிக்கவில்லை. பைரவியை விட இவன் தான் துடித்துப் போனான்.
மனம் மனைவியை நாட, விவாகரத்து என்ற முடிவை அவசரப்பட்டு தவறாக எடுத்து விட்டோம் என்ற கலக்கத்தில் வந்துள்ளான்.
மடியில் கிடந்த மனையாளின் தோளில் தலை சாய்த்தவனின் கரங்கள் மெல்லிடையில் குடு புக, அதில் காமம் துளியும் இல்லை. காதலாக அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். அந்த காட்சியை எதாவது ஒரு ஓவியன் கண்டால் அதை வரைவடிவமாக்கியிருப்பான்.
இருவரின் இந்த மோன நிலை சைந்தவிக்கு பிடிக்க வில்லை போலும். புடவையில் பொரிக்கப்பட்டிருந்த மதுசூதனன் ரூபிணியின் பெயரை புகைப்படமாக்கி பைரவிக்கு அனுப்பி வைக்க, அதுவும் க்ளிங் என்ற சத்தத்துடன் வந்து மதுவின் மடியை விட்டு எழ வைத்தது. கூடவே அவனையும் வீட்டை விட்டு போகச் சொல்லி கத்தவும் வைத்தது.
"ஓ… அவ கூட நடக்கப் போற கல்யாணத்துக்கு புடவ எடுத்து குடுத்திட்டு தான் என்னை பாக்க வந்திங்களா. மரியாதயை வெளில போய்டுங்க. " என அழுது கொண்டே சொல்ல, இம்முறையும் அவளின் கண்ணீர் பிடித்திருந்து. அதை கன்னங்களில் வடிந்து செல்ல விடாது, வேகமாக சென்று அவளின் மதி முகத்தை கரங்களில் ஏந்தி விரலால் துடைத்து எடுத்தவன்.
" டெடி இது உண்ம கிடையாது. அது பொய். " என்க,
" எது பொய்? நடக்கபோற கல்யாணமா!"
"எஸ்… நான் அன்னைக்கி சொன்னது தான் டெடி. என்னோட வைஃப்ன்னா அது நீ மட்டும் தான். அந்த இடத்த நான் யாருக்கும் தர மாட்டேன். இதுக்கு முன்னாடி எப்படியோ. இனி நீ என்னோட லவ். அத எப்ப உணர்ந்தேனோ அப்பத்துல இருந்து உன்ன யாருக்கும் விட்டு குடுக்க மாட்டேன். ஐ லவ் யூ டெடி. " என்றவள் நெற்றியில் முத்தமிட, அவனின் கரத்தைத் தட்டி விட்டவள்,
" பட் நான் உங்கள லவ் பண்ணல. ஐ ஹேய் யூ. " எனக் கத்தினாள். விடாது முன்னேறிய மதுவை விரட்ட கையில் கத்தி எடுத்துக் கொண்டாள்.
"வெளில போங்க. இல்லனா நான் எங்கைய வெட்டிபேன்… போங்க. " எனக் கத்தியவள் எடுத்தது அடுத்த ஆயுதம். சற்று கூர்மையானது தான். மதுவிற்கு வேறு வழியும் இல்ல. வெளியே சென்றான். வீட்டை விட்டு தான். வீதியை விட்டு அல்ல.
கதவைச் சாத்தியவனுக்கு ஆயாசமாக இருந்தது. இதற்கு முன் அவள் பேச வந்த போது ஒரு நிமிடமாவது அவளின் பேச்சிற்கு செவி சாய்க்காத தன்னை நொந்து கொண்டவன் காரில் ஏறி அமர, பைரவி இரவு உடையை மாற்றி விட்டு வேகமாக வந்து தன் சாப்பரை ஸ்டாட் செய்ய முயல்வது தெரிந்தது.
"இந்த நேரத்துல எங்க கிளம்புறா? " என நினைத்தவன் அவளின் அருகில் சென்று அவளிடமே கேட்க, அவனின் பார்வைக்கு தன் செல்போன் காட்டினாள்.
"என்னதிது. "
"சுடரக்காவோட இன்னொரு ஃபோன். காணாம போனது. "
"ஓகே... அதுக்கும் நீ காட்டுற இதுக்கும் என்ன சம்மந்தம். "
"ம்ச்… அது திருடு போல ஸ்விச் ஆஃப் ஆகி எங்கயாது கிடக்கும்னு தீஷ் சொன்னாரு. எப்ப சுவிட்ச் ஆன் ஆனாலும் உடனே எனக்கு மெஸ்சேஜ் வரும்னு ஆஃப் இறக்கி குடுத்தாரு. "
"பட் அரசனூர்ல காணாமப் போனது எப்படி சென்னைல இருக்குன்னு சிக்கல் காட்டும். "
"அதுக்கு அந்த இடத்துக்கு போய் பாத்தா தான் தெரியும். " என ஸ்டார்ட் செய்து சாம்பரில் ஏறி அமர்ந்தவளின் ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டான் மது.
"இந்த நேரத்துல நீ தனியா போறது நல்லதா படல. சோ, கார்ல எறு. " என்றவன் முன்னே நடக்க.
"எப்பயுமே நீங்க சொல்ற படி தான் நான் கேக்கணுமா. " எனக் கத்தியவள் சாப்பரை விட்டு இறங்க வில்லை.
"நல்லதுக்குன்னு யார் சொன்னாலும் கேக்கலாம். தப்பில்ல. கம். "
" எனக்கு உங்க உதவி தேவையில்லை. நானே எல்லாத்தையும் சமாளிச்சிப்பேன். "
"எனக்கு தெரியும் நீ ஒரு வீர மங்கைன்னு. பட் சிலரோட நிம்மதிக்காக என்னையும் துணைக்கி நீ கூட்டீட்டு போகலாம். சாந்தி ஆன்டிக்கு உன்ன நினைச்சு நிறைய கவல இருக்கு. இந்த வயசுக்கப்புறமும் நீ அவங்கள பயமுறுத்திட்டே தான் இருக்க போறியா. "
"ஓகே பைன். இந்த ஒரு தடவ தான். அடுத்து ஹெல்ப் பண்றேன்னு சொல்லி முன்னாடி வந்து நிக்க கூடாது. " என்று விட்டு ஏறிக் கொண்டாள்.
" நீயே வந்து ஹெல்ப் பண்ணுங்க மாமான்னு கேக்குற வரைக்கும் நான் உம்முன்னாடி மட்டுமில்ல நீ இருக்குற எந்த பக்கமும் வர மாட்டேன். " என அவனும் முறுக்கி கொண்டு காரில் ஏறினான்.
கார் சிக்னல் வந்த திசையில் பயணம் செய்தது.
தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..